பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா, ஏற்கனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை ஆரம்பித்து நடத்திக் கொண்டுள்ளது. முதற்கட்ட சோதனைகள் பிரிட்டனில் ஒரு கட்டம் சோதனை விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கப்படவுள்ளதாக பாஸ்கல் சொரியட் பிராட்காஸ்ட் பெல் ஆர்.டி.எல். இடம் கூறினார்.
“அஸ்ட்ராஜெனிகாவின் சாத்தியமான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சுமார் ஒரு வருடத்திற்கு COVID-19 தொற்றில் இருந்து பாதுகாப்பை வழங்கும்,” என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கடந்த செவ்வாயன்று ஒரு பெல்ஜிய வானொலி நிலையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த பிரிட்டிஷ் நிறுவனம், ஏற்கனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை ஆரம்பித்துள்ளது. பிரிட்டனில் முதல் கட்ட சோதனைகள் விரைவில் முடிவடைய உள்ளதால், மூன்றாம் கட்ட சோதனைகள் தொடங்கப்படவுள்ளன. அஸ்ட்ராஜெனிகாவின் தலைமை நிர்வாகி சோரியாட், “இந்த மருந்து ஒரு வருடம் வரை பாதுகாப்பு அளிக்கும் என்று நம்புகிறோம்,” என்று அறிவித்தார்.
அஸ்ட்ராஜெனிகா சனிக்கிழமையன்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 400 மில்லியன் டோஸ் வரை தடுப்பு மருந்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறியது. இது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களையும் ஒப்புக் கொண்டுள்ளது.
“அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் எங்களுக்குக் கிடைக்கும். நாங்கள் இதனுடன் இணையாக மருந்தின் உற்பத்தியும் தொடங்கி செய்து வருகிறோம். அனைத்தும் சரியாக நடந்தால் அக்டோபரிலிருந்து மருந்துகளை வழங்க நாங்கள் தயாராக இருப்போம்” என்று சொரியட் கூறினார். விரைவில் தடுப்பு மருந்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்!!!
தமிழில்: லயா