புதுடெல்லி: 
கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையில், நீதிபதிகள் நவின் சின்ஹா மற்றும் பீ.ஆர். கவாய் ஆகியோரை உள்ளடக்கிய நீதிமன்ற குழு….. சூழ்நிலையை உற்று நோக்கிய போது, இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டுதான் போகிறது என்று தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது.
ஜக்தீஷ் போலா மருந்து கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபர் ஜக்ஜித் சிங் சாஹலை பரோலில் அனுப்பும் வழக்கை விசாரித்த போது,  நீதிமன்றம் கொரோனா வைரஸ் தாக்கத்தால்  இந்தியாவின் தற்போதய  சூழ்நிலையை பற்றியும் பேசியுள்ளது.
மேலும் நீதிமன்றம் இது போன்ற நிலைமையில் ஒருவரை நெரிசல் நிறைந்த சிறையில் அடைப்பது சரியில்லை என்றும், நிலுவையில் உள்ள ஜக்ஜித் சிங்கின் வழக்குகள் மேல்முறையீட்டுக்கு செல்லும் வரை அவர் வெளியில் இருக்கலாம் என்று அவருடைய  பரோலுக்கு அனுமதி அளித்தது.
மேலும், கடந்த  மார்ச் 23-ஆம் தேதியே உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தற்போதய சூழ்நிலையின் காரணமாக சிறைச்சாலையின் கூட்டத்தை குறைக்க பரோல் மற்றும் இடைக்கால ஜாமீன் பற்றிய வழக்குகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.