சென்னை:

21/06/2020, 28/06/2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளின்றி முழுமை யான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் டீக்கடைகளை த் தவிர மற்ற கடைகளைத் திறக்க காலை 6 மணி முதல் 2 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த்
தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

இதையடுத்து,  19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு ; அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களை பயன் படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்முடுள்ளது.

மேலும்,  21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.  (அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.  அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்).

இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவ மனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடு களுக்கும் அனுமதி கிடையாது. 

அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment zone),), எந்தவிதமான செயல்பாடுகளும்
அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும்
தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக் கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செடீநுயும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்து உள்ளது.