நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.
ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
இந்நிலையில் சுஷாந்தின் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
”சுஷாந்த் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அவரது ரசிகர்களாகிய நீங்கள் இத்தனை நாட்களும் செய்தது போலவே அவரை உங்கள் நெஞ்சில் நிறுத்தி அவரது வாழ்வையும், பணியையும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த துயர்மிகு நேரத்தில் எங்கள் அந்தரங்க உரிமைகளைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.