நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.

ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங்கின் திடீர் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது ட்விட்டர் பதிவில்

“திறமையான இளம் நடிகரான சுஷாந்த் சிங்கின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தை அளிக்கிறது. வெள்ளித்திரையில் அற்புதமான சில கதாபாத்திரங்களுக்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். பல இளைஞர்களுக்கு அவர் ஒரு அடையாளமாகவும், உதாரணமாகவும் இருந்துள்ளார். அவர் நம்மை விட்டு விரைவாக சென்றுவிட்டார். அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]