சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் அதன் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இன்று மேலும்   1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை   31,896 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

bty

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. மாநில தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  அவர்களில்  14,667 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை சென்னையில் மட்டும் ,16,881பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் பலி எண்ணிக்கை  347 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்:

செங்கல்பட்டு 178, சென்னை 1415, கோவை 3, தருமபுரி 1, திண்டுக்கல் 10, ஈரோடு 1, கள்ளக்குறிச்சி 14, காஞ்சிபுரம் 32, கரூர் 1, மதுரை 16, நாகை 7, பெரம்பலூர் 1, ராமநாதபுரம் 23,  சேலம் 10, சிவங்ககை 14,  தென்காசி 16, தஞ்சாவூர் 4, தேனி 8, திருப்பத்தூர் 2, திருவள்ளூர் 81, திருவண்ணாமலை 31, திருவாரூர் 8,  திருநெல்வேலி 19,  திருப்பூர் 1, திருச்சி 9, வேலூர் 9, விழுப்புரம் 15, விருதுநகர் 6.

 

[youtube-feed feed=1]