டெல்லி:
டெல்லியில் கொரோனா தீவிரமடைந்து வரும் நாளை காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உலக அளவில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், 311 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 42 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. இந்தியாவில் இரண்டாவது நாளாக கடந்த 24 மணிநேரத்தில் 11,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் இதுவரை 38,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1271 பேர் பலியாகி உள்ளனர். அங்கு நோய்த் தொற்று தீவிரமாகி வருவதால், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
உள்துறை சார்புக டெல்லியில் உள்ள அனைத்துக்கட்சிகளும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து, டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.