நடிகைகள் பாலியல் மீதான தொல்லை விவகாரம் குறித்து ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை புகார்கள் உள்ளன. நடிகை தேஜஸ்வி மடிவாடா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி கூறினார்.
’திரையுலகில் நடிக்க வந்து ஒரு இடத்தை பிடிப்பதென்பது எளிதான விஷயம் கிடை யாது. நடிகைகளை படங்களுக்காக தேர்வு செய்யும் காஸ்டிங் கவுச் மூலம் பாலியல் தொல்லை ஏற்படுகிறது. அது எனக்கும் நேர்ந்தது. அட்ஜெஸ்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்று கூற கேட்டிருக்கிறேன். அதனால் பல படங்களில் நடிக்கவில்லை. இந்தியிலிருந்து வரும் நடிகைகள் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு நிறைய வாய்ய்புகள் கிடைக் கின்றன. காஸ்டிங் கவுச் பிரச்னையால் என்னுடைய காதல் கூட முறிந்துபோனது.
இவ்வாறு தேஜஸ்வி மடிவாடா கூறினார்.
தேஜஸ்வி மடிவாட தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். காஸ்டிங் கவுச் பிரச்னையால் 3 வருடத்துக்கு முன்பிருந்து சினிமாவில் நடிக்கமல் ஒதுங்கி இருக்கிறார். கடைசியாக கடந்த 2017 ம் ஆண்டு ’பாலகிருஷ்ணடு’ என்ற படத்தில் நடித்தார்.