கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை…

தமிழக அரசு, அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ல் இருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது.

அநேக அரசு ஊழியர்கள் ‘ஸ்வீட்’ எடுத்து இந்த உத்தரவைக் கொண்டாடிவரும் நிலையில், காவல்துறையில் ஆய்வாளர்களாக (இன்ஸ்பெக்டர்) பணிபுரியும் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏன்?

தற்போது இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் 120 பேர் துணை காவல்துறை கண்காணிப்பாளர்களாக ( டி.எஸ்.பி) நியமிக்கப்படுவதாக இருந்தனர்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், அந்த இன்ஸ்பெக்டர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

உச்சவரம்புக்கும், பதவி உயர்வுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?

இருக்கிறது.

இப்போது 58 வயது நிரம்பியுள்ள 40 டி.எஸ்.பி.க்கள் ஓய்வு பெறுவதாக இருந்தனர். அரசு உத்தரவால் அவர்கள் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது,

எனவே 120 டி.எஸ்.பி.க்கள் பதவி உயர்வு எண்ணிக்கை 80 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

’’அந்த 40 பேரும்,’’ ஓய்வு பெறும் வரை 40 ஆய்வாளர்கள் காத்திருக்க வேண்டும்.,

— பா.பாரதி