சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 194 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 31ந்தேதி நிலவரப்படி, 22,333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பலி எண்ணிக்கையும் 173 ஆக இருந்தது.
ஆனால், தற்போதைய (ஜூன் 12ந்தேதி)  நிலவரப்படி  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 40698 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ( கொரோனாவுக்கு 18 பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24ந்தேதிமுதல் மே 31ந்தேதி  74 நாட்களில் 173 பேர் மட்டுமே பலியான நிலையில், சமீப காலமாக, ஜூன் 1ந்தேதி முதல் ஜூன் 12ந்தேதி வரையிலான இடைப்பட்ட 12 நாட்களில் பலி எண்ணிக் 194 ஆக உயர்ந்துள்ளது.  இது மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 294  ஆக அதிகரித்துள்ளது.  ஜூன் 1ந்தேதி முதலே கொரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தில் உள்ளது. கோரனாவின் கோர முகத்துக்கு பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
கொரோனாவில் கோர தாண்டவத்தை அடக்க தமிழக அரசு உடனடி மற்றும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்களும், சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தள்ளனர்.