ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்கு சென்று கொரோனா தடையால் அங்கு சிக்கிக்கொண்டார் பிரித்விராஜ். 2 மாதத்துக்கு பிறகு மீட்கப்பட்டார். தாடி மீசையுடன் முகமே வாடிப்போய் ஊர் திரும்பியவர் 14 நாட்கள் தன்மையில் இருந்து பின்னர் கொரோனா பரிசோதனை மேற் கொண்டு அதில் தொற்று இல்லை என்பது உறுதியானபிறகு வீடு திரும்பினார்.


இனி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில் தாடி மீசையை மழித்து பளபளக்கும் முகத் தோற்றத்துக்கு திரும்பினார். 6 மாதத்துக்கும் மேலாக ஆடுஜீவிதம் பாத்திரத்துக்காக வளர்த்த தாடி மீசைக்கு பை பை சொல்லியிருக்கிறார். மனைவியுடன் சேர்ந்து எடுத்த அந்த செல்ஃபி புகைப்படத்தை நெட்டில் பகிர்ந்திருக்கும் பிரித்வி அத்துடன் ‘ஜிம் பாடி வித் நோ தாடி -பைனைலி’ என பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரிஜினல் முகத்தை பார்க்கிறோம் என்று கமெண்ட் பகிர்ந்துள்ளனர்.