டெல்லி:
ரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு புதிதாக  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை யடுத்து மொத்த பாதிப்பு 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கடந்த  24 மணி நேரத்தில் 396 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் காரணமாக மொத்த பலி 8,498 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், குணமடைந்தோர் எண்ணிக்கை  1,47,195ஆக உயர்ந்துள்ளது.உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 2வது  இடத்தில் பிரேசிலும் 3வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. இதையடுத்து இந்தியா  4 வது இடத்தில் உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும்என்றும்,  பேருந்துகள், லாரிகள் போன்றவை தவிர பிற வாகனங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும்  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.