சென்னை:
தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 5வது கட்டமாக ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதுபோல தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
பின்னர், ஒத்திவைக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், கல்லூரி தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.