சென்னை

மிழக அரசு மீண்டும் முழு ஊரடஙகி கொண்டு வந்தால் ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளதாகத் தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக உள்ளது.  எனவே மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என செய்திகள் வருகின்றன.

இன்று தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்கிரமராஜா கொரோனா வைரசால் வணிகர்கள் சந்தித்து வரும் பிரச்சினை குறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணனைச் சந்தித்தார்.  அவருடன் வணிகர் சங்க பேரவை நிர்வாகிகளும் உடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்

அதன் பிறகு விக்கிரமராஜா செய்தியாளர்களிடம்,ம், “ சென்னையில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.  அதைக் கட்டுப்படுத்த  தமிழக அரசு 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தினால் கடைகளை அடைத்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் கோயம்பேடு உள்ளிட்ட பல காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன.  அவற்றை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் அதற்கு அரசு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் அவசியம்  பின்பற்றுவோம் என உறுதி அளிக்கிறேன்.

உள்ளாட்சித் துறை, அறநிலையத் துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான கடைகளில் வர்த்தகம் செய்வோருக்கு ஏப்ரல் மற்றும் மே மாத வாடகைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வணிகர்கள் நலனுக்காக அடுத்த ஓராண்டுக்கு இந்த கடைகளின் வாடகையில் 50% சலுகை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.