டெல்லி: உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா 4வது இடத்துக்கு வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில்இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் 7,487,297 பேரை பாதித்துள்ளது. 419,560 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நோயில் இருந்து இதுவரை 3,800,628 பேர் குணமடைந்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 9996 பேருக்கு கொரோனா பாதிப்பு. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 357 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது 6வது இடத்தில்உள்ள இந்தியா நாளையோ அல்லது நாளை மறுதினமோ 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை சுடுகாடாக்கி வருகிறத அங்கு இதுவரை 20.6 லட்சக்குங்ம மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதையடுத்து 2வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 7.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 700ஐ தாண்டி உள்ளது. 3வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அங்கு இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 5.02 லட்சம் ஆகவும், , 4வது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.90 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 5வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 2.89 லட்சம் ஆக உள்ளது. இதையடுத்து 6வது இடத்தில் உள்ளது. நாட்டில் 2 லட்சத்து 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர். ஜூன் மாதம் தொடக்கம் முதலே கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால், இந்தியா ஓரிரு நாளில் 4வது இடத்தை எட்டிவிடும் நிலை ஏற்படும் என்று சுகாதாரத்துறையினர் அச்சம் தெரிவித்து உள்ளனர். Patrikai.com official YouTube Channel YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LmdPRlBUdlFMS2w4 ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..#saibaba #omsairam KAS மூலம் விஜய்க்கு political mileage கிடைக்குமா? ஜெகதீஸ்வரன் #kas #sengottaiyan #kasengottaiyan சாய்பாபா பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன? #saibaba #omsairam Post navigation நீதிமன்ற ஆவணங்களைப் பெற நீதிமன்ற விதிகளையே பின்பற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம் கேரள சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை 13 ஆம் தேதி திறந்து வைக்கும் ராகுல் காந்தி