வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,705 உயர்ந்து 74,46,229 ஆகி இதுவரை 4,18,137 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,705 பேர் அதிகரித்து மொத்தம் 74,46,229 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,165 அதிகரித்து மொத்தம் 4,18,137 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 37,30,056 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,812 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,852 பேர் அதிகரித்து மொத்தம் 20,55,401 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 982 அதிகரித்து மொத்தம் 1,15,130 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,08,494 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,100  பேர் அதிகரித்து மொத்தம் 7,75,184 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1300 அதிகரித்து மொத்தம் 39,797 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,80,300 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,404  பேர் அதிகரித்து மொத்தம் 4,93,657 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 116 அதிகரித்து மொத்தம் 6,358 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,52,783 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1003 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,90,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 245 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 41,128 ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,156  பேர் அதிகரித்து மொத்தம் 2,84,155 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 357 அதிகரித்து மொத்தம் 8,107 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,40,979 பேர் குணம் அடைந்துள்ளனர்.