சென்னை:

மிழகப் பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பில் தேர்வு நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மட்டும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில் தெரிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ம் வகுப்பு தேர்வில் சில பாடங்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வு ரத்த செய்வதாக அறிவித்த முதல்வர் எடப்பாடி, அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அதில், ’’11-ம் வகுப்புக்கான தேர்வில் ரத்து செய்யப்பட்ட வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது போலம் 11-ம் வகுப்பிலும் தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.