டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் டில்லியும் ஒன்றாகும்.

இங்கு சுமார் 30000 பேர் பாதிக்கப்படு 874 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்திய அளவில் பாதிப்பில் டில்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வலுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது.

அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.