மல்ஹாசன் இயக்கி நடிக்கவிருக்கும் படம் தலைவன் இருக்கிறான். இதில் விஜய்சேதுபதி, வடிவேலு நடிக்க உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க உள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் கமலும் தானும் நெட்டில் ரசிகர்களை சந்திப்பது பற்றி அறிவித்திருக்கிறார்.
அவர் தனது மெசேஜில்,’நான் மற்றும் கமல்ஹாசன் இருவரும் வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்கிறோம்’ என குறிப்பிட்டிருக்கிறார் ரஹ்மான்.
இந்த சந்திப்பின்போது தலைவன் இருக்கிறான் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தெரிகிறது. தேவர்மகன் படத்தின் 2ம் பாகமாக தலைவன் இருக்கிறான் உருவாகிறது.