திருமலை:
கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, பக்தர்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டி ருந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதலில், பக்தர்கள் மொட்டை (தலைமுடி காணிக்கை) அனுமதி வழங்கப்படாத நிலையில், இன்றுமுதல் மீண்டும் மொட்டை போட தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, மோட்டையடிப்பவர், கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடை மற்றும் கவசங்களுடன், பக்தர்களுக்கு மொட்டை போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நேற்றும், இன்றும், திருமலை–திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்யவும், 10ந்தேதி உள்ளூர் மக்களுக்கும், 11ந்தேதி முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுப்பப்படுகின்றனர்.
திருமலையில் உள்ள கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை யாகச் செலுத்தலாம் என்றும், திருமலையில் பொதுமக்கள் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்தது.
அதையடுத்து, இன்று சிலர் தங்களது நேர்த்திக்கடனை மோட்டையடித்து செலுத்தினர். அவர்களுக்கு மொட்டையடிக்கும் நபர்கள், முழு கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் அமர்ந்து, பக்தர்களுக்கு மொட்டையடித்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.