டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,486 ஆக உயர்ந்து 7207 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 10,884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,57,486 ஆகி உள்ளது. நேற்று 261 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 7207 ஆகி உள்ளது. நேற்று 5191 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,23,848 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,418 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 3007 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 85,975 ஆகி உள்ளது நேற்று 91 பேர் உயிர் இழந்து மொத்தம் 3060 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1924 பேர் குணமடைந்து மொத்தம் 39,314 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1515 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,667 ஆகி உள்ளது இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 272 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 604 பேர் குணமடைந்து மொத்தம் 16,999 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1282 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,936 ஆகி உள்ளது. நேற்று 51 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 812 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 335 பேர் குணமடைந்து மொத்தம் 10,999 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 480 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,097 ஆகி உள்ளது இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 1249 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 319 பேர் குணமடைந்து மொத்தம் 13,643 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 262 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,599 ஆகி உள்ளது இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 240 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 253 பேர் குணமடைந்து மொத்தம் 7754 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதி மட்டும் கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக உள்ளது.