வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,090 உயர்ந்து 70,82,212 ஆகி இதுவரை 4,05,081 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,090 பேர் அதிகரித்து மொத்தம் 70,82,212 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3382 அதிகரித்து மொத்தம் 4,05,081பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 34,56,944 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,752 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,905 பேர் அதிகரித்து மொத்தம் 20,07,449 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 373 அதிகரித்து மொத்தம் 1,12,469 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,61,708 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,375  பேர் அதிகரித்து மொத்தம் 6,91,982 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 542 அதிகரித்து மொத்தம் 36,499 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,02,084 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,984  பேர் அதிகரித்து மொத்தம் 4,67,673 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 134 அதிகரித்து மொத்தம் 5,859 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,26,731 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 240 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,88,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவர் ஒருவர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 27,136 ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,884  பேர் அதிகரித்து மொத்தம் 2,57,486 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 261 அதிகரித்து மொத்தம் 7207 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,23,848 பேர் குணம் அடைந்துள்ளனர்.