சென்னை
தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி ஏதும் இல்லாததால் சோதனை, தனிமைப் படுத்தல், சிகிச்சை ஆகிய முறைகள் மட்டுமே கையாளப்பட வேண்டி உள்ளது.
எனவே தனியார் சோதனை நிலையங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் உள்ள சோதனை நிலையங்களில் இலவசமாகப் பரிசோதனை செய்யப்படுகிறது.
தனியார் சோதனை நிலையங்களில் இதுவரை ரூ.4500 சோதனைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அந்த கட்டணம் தற்போது ரூ.3000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel