கேட்டது டிஸ்சார்ஜ் கிடைத்தது ஜெயில் வாசம்..’
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி சேலம் சென்ற அவருக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், அந்த மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு, அவர் அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு டாக்டர்கள் வந்துள்ளனர்.
அப்போது பழம் நறுக்குவதற்குக் கொடுத்த கத்தியை எடுத்து ‘’ என்னை உடனடியாக ‘டிஸ்சார்ஜ்’ செய்யுங்கள்’’ என அந்த கார் ஓட்டுநர் , டாக்டர்களை மிரட்டி உள்ளார்.
கனிவாக பேசி அவரை டாக்டர்கள் சமாதானம் செய்து விட்டு, போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
செவ்வாய்பேட்டை போலீசார் கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, அவர் ’’டிஸ்சார்ஜ்’’ ஆகும் நாளுக்காக மருத்துவமனை வாயிலில் காத்திருந்தனர்.
நேற்று அவர், நோயின் தாக்கத்தில் இருந்து குணமாகி வெளியில் வந்தபோது, போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சங்ககிரி ஜெயிலில் அடைத்தனர்.