மினியாபாலிஸ்
அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி தாக்கியதில் உயிர் இழந்த ஜார்ஜ் பிளாயிட்க்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள மினியாபாலிஸ் நகரில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடைய கழுத்தில் அமெரிக்க காவல்துறை அதிகாரி காலை வைத்து அழுத்தியதில் அவர் மூச்சு திணறி உயிர் இழந்தார். இந்த காட்சி வீடியோ படமாக்கப்பட்டு வெளியாகி வரலாகியது.
இந்த நிகழ்வால் அமெரிக்கா முழுவதும் கடும் போராட்டம் வெடித்துள்ளது. வெள்ளை மாளிகை முற்றுகை இடப்பட்டு கலவரம் வெடித்தது. அமெரிக்காவில் ஆங்காங்கே கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. கொல்லப்பட்ட ஜார்ஜ் பி ளாயிட் மருத்துவ அறிக்கையில் அவருக்கு கொரோனா பாதிப்பு முன்பு இருந்ததாகவும் ஆனால் அவர் மரணத்துக்கு கொரோனா காரணம் இல்லை எனவும் அறிவிக்கபட்டுள்ள்து.
அந்த அறிக்கையில், “மரணமடைந்த ஜார்ஜ் ஃபிளாயிட் உடல் பரிசோதனையில் அவருக்கு கொரோனா உள்ளது தெரிய வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் உடலில் இன்னும் அந்த தொற்று உள்ளது. ஆயினும் அவருடைய இறப்புக்கு கொரோனா தொற்று காரணம் இல்லை” என உள்ளது.
அமெரிக்காவில் பிரபல மருத்துவர் ஒருவர், “ஜார்ஜ் பிளாயிடுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்ததை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை, எனவே அவருடைய உடலைப் பரிசோதித்தோர், எரியூட்டியோர் என அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களுக்கு மட்டுமின்றி ஜார்ஜைக் கைது செய்த 4 அதிகாரிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும்” எனக் கூறி உள்ளார்.