சென்னை:

ரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள் பணிக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் வரும் 15ந்தேதி தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி அறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, தேர்வுக்காண பணிகள் நடைபெற்று வருகின்றன. தொற்று பரவாமல் இருக்க தேர்வு அறையில் இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனால், தேர்வு அறைகள் அதிகம் தேவைப்படும் நிலையில், ஆசிரியர்களும் அதிகமாக தேவைப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தொடக்கக்கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணியில் முன்னுரிமை வழங்கலாம் என்றும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார்.