டில்லி

ங்கிகள் கடனுக்கான வட்டியை கொரோனாவை ஒட்டி தள்ளுபடி செய்தால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழில்கள் மற்றும் வர்த்தகம் அறவே முடக்கியது.  இதையொட்டி வங்கிக் கடன் பெற்றோர் மாதத் தவணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை செலுத்தலாமென கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்தது.

ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாத நிலை உள்ளதால் வங்கிக் கடன்களுக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடிச் செய்ய வேண்டும் என மனு அளித்தார்.  இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் இதற்குப் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இன்று ரிசர்வ் வங்கி அளித்த பதில் மனுவில், “ஏற்கனவே மாததவணை செலுத்த வேண்டிய கால அவகாசம் நீட்டிக்கபட்டுளது.  எனவே வட்டியைத் தள்ளுபடி செய்ய இயலாது. அவ்வாறு தள்ளுபடி செய்தால் வங்கிகள் ரூ.2.10 லட்சம் கோடி இழப்பைச் சந்திக்க நேரிடும். இது ஜிடிபியில் 1% ஆகும்.

வங்கிக் கடன்  வட்டியைத் தள்ளுபடி செய்தால் வங்கிகளின் நிதி சுழற்சி கடுமையாக பாதிக்கப்படும்.  இதனால் முதலீட்டாளர்கள் நலன் வெகுவாக பாதிப்பு அடையும்.  மேலும் தவணை செலுத்த வழங்கப்பட்டுள்ள கால அவகாச நீட்டிப்பு கடன் வாங்கியோருக்கு நல்ல நிவார்னஅக இருக்கும்” எனத் தெரிவித்தது.

இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது.