Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
திருவண்ணாமலை:
வரும் 5ந்தேதி பவுர்ணமி அன்று திருவ்வணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்ல தடை விதித்து விதித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை, அக்னி தலமாக விளங்குகிறது. இங்குள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், மாதம்தோறும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கானோர் குவிந்து, 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள கோயிலின் சுற்றுப் பாதையில் கிரிவலம் வருவது வழக்கம். ஆனால், கொரோனாவால் கிரிவலம் தடை செய்யப்பட்டுஉள்ளது.
இந்த மாதத்திற்கான வைகாசி மாத பவுர்ணமி வரும் 5ந்தேதி வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 03:23 மணி முதல் 6ந்தேதி அதிகாலை 01:26 மணி வரை கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரமாகும்.
ஆனால், இந்த மாதமும் கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். வெளியூர் உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.