சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் இருந்து பயணிகள் ரயில்களை இயக்கலாம் என்று இந்தியன் ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி,
கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம் – மதுரை, திருச்சி – நாகர்கோயில் -திருச்சி, கோவை -காட்பாடி -கோவை ஆகிய நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கொரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரயில் சேவை அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை தவிர்த்து மேலும் சில இடங்களுக்கு பயணிகள் ரயில்கள் சேவையை தொடங்கும்படி, இந்தியன் ரயில்வே துறைக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், திருச்சி – அரியலூர் – விழுப்புரம் செங்கல்பட்டு மார்க்கம், மற்றும் அரக்கோணம்- காட்பாடி- கோயம்புத்தூர் மார்க்கம்,
திருச்சி – கும்பகோணம் – மயிலாடுதுறை – விழுப்புரம் மார்க்கமாக செங்கல்பட்டு வரை பயணிகள் ரயிலை இயக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருச்சி – கும்பகோணம் – மயிலாடுதுறை – விழுப்புரம் மார்க்கமாக செங்கல்பட்டு வரை பயணிகள் ரயிலை இயக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.