அடுத்த வாரம் கள்ளுக்கடைகள் திறப்பு..

மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

இதையடுத்து பல மாநிலங்கள் மதுபான கடைகளைத் திறந்துள்ளன.

தென் இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களும், குடிமகன்களை மகிழ்விக்கும் நோக்கில்,ஒன்றன்பின் ஒன்றாக மதுக்கடைகளைத் திறந்து விட்டன.

கேரளாவும், புதுச்சேரியும் மட்டும் இன்னும் கள்ளுக்கடைகளைத் திறக்கவில்லை.

இந்த நிலையில் கோழிக்கோட்டில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதல் –அமைச்சர் பினராயி விஜயன், ‘’ கேரள மாநிலத்தில் வரும் 13 ஆம் தேதி கள்ளுக்கடைகள் திறக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

’’ எனினும் கள்ளுக்கடைகளில் குடிமகன்கள் அமர்ந்து கள் அருந்த அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

‘’ மதுக்கடைகளை ஏற்கனவே திறந்துள்ள சில மாநிலங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்த பினராயி விஜயன், ’’ எனவே தான் கேரளாவில் மதுபான கடைகளைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’’ என்று மேலும் குறிப்பிட்டார்.