கிரிக்கெட் வீரர் டோனி, சச்சின், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் போன்றவர்களின் வாழ்க்கை படங்கள் உருவாகின. அந்த வரிசையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கர்னம் மல்லேஸ்வரி வாழ்க்கை கதை படமாக உள்ளது.
இந்திய பெண்கள் உலக அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி”. இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். எம்விவி.சத்யநராயணா கொனா வெங்கட் ஆகிய இருவரும் எம்விவி சினிமா மற்றும் கொனா பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர். . கொனா வெங்கட் படத்தின் ஸ்ரிப்ட் எழுதுகிறார்.
இதில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.