அதிமுகவின் தலைவரும், நடிகருமான எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு புரட்சி நடிகர் என்று பட்டப்பெயர் சூட்டி, அவரை வாழ வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி ஏராளமான இலக்கிய நூல்களை அவருக்கே உரிய பாணி யில் எழுதியுள்ளார். அதுபோல ஏராளமான திரைப்படங்களுக்கும் கதை வசனம் மற்றும் பாடல்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு பங்களிப்பை உருவாக்கிய கருணாநிதி.. திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியவர்.
கருணாநிதி எழுதிய நூல்களில் பிரசித்தி பெற்றது சங்கத்தமிழ் இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதி பெரும் வரவேற்பை பெற்றார்.
பண்டைய விடுதலைப்போராட்ட வீரர்களான பொன்னர் சங்கர் முதல், நவீன கால இளைஞர்களுக்கு ஏற்ப, இளைஞன் திரைப்படம் வரை ஏராளமான திரைப்படங்களில் கதை வசனம், பாடல் எழுதி சாதனை படைத்தவர்.
கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப்படத்தில் தான் முதன்முதலாக எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்தார். இந்த படத்தை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. மிகப் பெரிய வெற்றிப் படமாக இப்படம் அமைந்தது. இப்படத்தினில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, எம். என். நம்பியார் போன்ற கலை உலக ஜாம்பவான்கள் ஒன்றாகப் பணி புரிந்தனர். இப்படத்தின் கதை வசனத்தை கருணாநிதி எழுதினார். இப்படத்தின் வசனங்கள் பெரிதும் பேசப்பட்டது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகே எம்ஜிஆருக்கு திரையுலகில் நிரந்தர இடம் கிடைத்தது.
இந்த படத்தில், ‘கொள்ளையடிப்பதும் ஒரு கலை’ என்று வசனம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். கருணாநிதியின் பெரும்பாலான கதைகள் அனைத்தும், மக்களை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபடும் நோக்கத்தையே பிரதிபலித்தன.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர், தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக .இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார்.
இதுமட்டுமின்றி, ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’, ‘மத பாசாங்குத் தனத்தை வேரறுத்தல், ‘தீண்டாமை ஒழிப்பு’ , ‘விதவை மறுமணம்’, ‘சுய மரியாதை திருமணம்’ போன்றவற்றை முன்னிலைப்படுத்தியெ இருந்தன.
நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு திரையுலகில் நீங்காத இடத்தை பெற்றுத்தன, ‘பராசக்தியில்’ படத்துக்கு கலைஞர் எழுதிய வசனம் இன்றுவரை பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது. திரைக்கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள்களே, அவரை அக்காலத்தில் மிகவும் பிரபலமாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். அவர் ஒரு கலாரசிகனாக இருந்ததால், புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக்கலைக் குவியலான ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார்.
இவை மட்டுமின்றி எண்ணற்ற நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
கலைஞர் எழுதிய காவியங்களில் சில…
ரோமாபுரி பாண்டியன்
சங்கத்தமிழ்
குறளோவியம்
பாயும்புலி பன்டாரக வன்னியன்
புதையல்
பொன்னர் சங்கர்
ஒரே ரத்தம்
தென்பாண்டிச் சிங்கம்
சுருளிமலை
மகான் பெற்ற மகன்
கவிதையல்ல
ஒரு மரம் பூத்தது
வெள்ளிக்கிழமை
கயிற்றில் தொங்கிய கணபதி
கிழவன் கனவு
சீறாப்புராணம்
சிலப்பதிகாரம்
கலைஞரின் கவிதைகள்
அண்ணா கவியரங்கம்
இனியவை இருபது
அரும்பு
சாரப்பள்ளம் சாமுண்டி
பெரிய இடத்துப் பெண்
நடுத்தெரு நாராயணி
கலைஞரின் சிறுகதைகள்
மணி மகுடம்
உதயசூரியன்
தூக்குமேடை
புனித ராஜ்யம்
பரதாயனம்
வண்டிக்காரன் மகன்
மதுப்பழக்கம் ஒரு சமூகப் பிரச்சினை
மேலவைப் பேருரை
எழுச்சிக் கோலம் காண்போம்
நாளும் தொடரும் நமது பணிகள்
உரிமையின் குரலும், உண்மையின் ஒளியும்
நமது நிலை
இலட்சிய பயணம்
அக்கினிப் பிரதேசம்
சரித்திரத் திருப்பம் புதிய சகாப்தம்
அண்ணா அறிவாலயத்துக்குத் தடையா?
உள்ளாட்சி மன்ற ஊழல்கள்
இருபது அம்சம்
இருளும் ஒளியும்
சொன்னதைச் செய்வோம்
உண்மைகளின் வெளிச்சத்தில்
உறவுக்குக் கை கொடுப்போம்
உதய ஒளி
உதயக் கதிர்
ஒதுக்கிய நிதியை ஒதுக்கியவர் யாரோ?
இந்தித் திணிப்பு
உறவும், உரிமையும்
இது ஓர் இனமானப் போர்
கல்லணையிலிருந்து கழனிக்கு
வரலாற்றுச் சுவடு
மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று
உண்மையின் உரத்த குரல்
போர் முரசு
ஒளி படைத்த கண்ணினாய் வா.. வா.. வா..
சூளூரை
அமைதிப்படையா? அமளிப்படையா?
அக்கினிக்குஞ்சு
இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது?
இந்தியா? இந்தியாவா?
இலக்கிய விருந்து
கடவுள் மீது பழி
அன்றும் இன்றும்
இருபது சதவிகித ஒதுக்கீடு
இது ஒரு தொடக்கம்
எச்சரிக்கை தேவை.. எழுச்சி தேவை!
திசை திருப்பும் படலம்
பேசும் கலை வளர்ப்போம்
யாரா? யாரால்? யாரால்?
கண்ணீரே கவசம்
இலங்கைத் தமிழா இது கேளாய்!
இந்தியாவில் ஒரு தீவு
சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்
ஆறு மாதக் கடுங்காவல்
கழகத்துப் பரணி
கடிதங்கள், கடிதங்கள், கண்ணீர் கடிதங்கள்
நெஞ்சுக்கு நீதி பாகம்-1
நெஞ்சுக்கு நீதி பாகம்-2
கொழும்பு ஒப்பந்தம்
கலைஞரின் கடிதங்கள் 12 பாகங்கள்
தொல்காப்பியப் பூங்கா