புதுடெல்லி: குறிப்பிட்ட பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.
பயன்பாட்டு மருந்துப் பொருட்கள் வழங்கலில், இந்திய எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக தன்னிறைவை அடைய வேண்டும் என்றார் அவர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ், மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இத்துறையில், தொழில்துறை விரிவாக்கம், பல்வகைப்படுத்தல் மற்றும் வலுவாக்கல் தொடர்பான அம்சங்களுக்கு அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மொத்தம் 53 வகையான மருந்துகளின் மொத்த உற்பத்திக்கு, அரசால் நிதி சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கோவிட் நெருக்கடி சமயத்தில், இந்திய மருந்து நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டதை சுட்டிக்காட்டி கோயல் பாராட்டினார்.