சென்னை:
மிழகத்தில் பல்வேறு கொரோனா சர்ச்சைகளுக்கிடையில் அறிவிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஹால் டிக்கெட் வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்கள், ஆன்லைன் மூலமாகவும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள் தொடங்க இன்றும் 15 நாட்களே உள்ள நிலையில்,  அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிகள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, துாய்மைப்பணிகள் நடந்து வருகின்றன.