சென்னை:
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், சரக்குப் போக்குவரத்துக் காக ரயில்வே இயங்கிக்கொண்டிருந்தது. மேலும், ர் மே 1-ந் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர் களுக்காக நாடு முழுவதும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் நிலைய அதிகாரிகள் பலருக்கு கொரோனா பரவியதாக கூறப்பட்டது. இதையடுத்து, தெற்குரெயில்வே தலைமை அலுவலகமான டிஆர்எம் அலுவலகம் மூடப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை கோட்டத்தில் மொத்தம் 80 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து சென்னை கோட்ட பணியாளர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த தகவலை ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Patrikai.com official YouTube Channel