சென்னை:
தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
நேற்று மத்தியஅரசு அறிவித்த நிலையில், இன்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும் மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

Patrikai.com official YouTube Channel