பீஜிங்

சீனா மற்றும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியதைச் சீனாவும் நிராகரித்தது.

இந்தியச் சீன எல்லையான லடாக் சிக்கிம் போன்ற பகுதிகளில் சீனா தனது ராணுவத்தைக் குவித்துள்ளது.  இதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தைக் குவித்துள்ளது.  இதையொட்டி எல்லையில் கடும் பதட்டம் ஏற்ப்ட்டுள்ள்து.  இது குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி  வருகின்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு வீரர்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்காவும் போர் புரியவும் தயாராக  இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.   இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தேசியப் பாதுகாப்பு ஆலொசக்ர் அஜித் தோவல், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினை ஏற்பட்டால் தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்தார். ஆனால் இதை இந்தியா நிராகரித்தது.    இரு நாட்டு அளவில் ராணுவம் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவுக்கு வர உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் சீன அரசும் இதை நிராகரித்துள்ளது.

சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், “இந்த பிரச்சினையை இருநாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளன.  எனவே மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை.   அத்துடன் இரு நாட்டுப் பிரச்சினையில் மற்றொரு நாட்டின் தலையீடும் எவ்விதத்திலும் தேவை இல்லை” என அறிவித்துள்ளார்.