நியூயார்க்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று 210க்கும் மேற்பட்ட நாடுகளை ஆக்கிரமித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா பரவலை தடுக்க முடியாமல் திக்குமுக்காடி வருகிறது. அங்கு இதுவரை 17,68,461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,03,330 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் 4,98,725 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,66,406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 17,202 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் 59,05,846 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 362,024 பேர் பலியாகியுள்ளனர். 25,79,877 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 29,09,973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 53,972 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இவ்வாறு அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel