மும்பை:
கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டி, 2022 வரை ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதிவரையில் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று உலக முழுவதும் பரவி, உலக மக்களை பீதிக்குள்ளாகி வருவதால், டி 20 உலகக் கோப்பை போட்டி உள்பட அனைத்து வகையான உலக போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டன.
இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளன. அதுபோல டி20 போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவிலும், வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிலையில், டி 20 உலகக் கோப்பை போட்டி தள்ளி வைப்பது குறித்து ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போட்டியை 2022வரை ஒத்தி வைக்க முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து அவசர கதியில் முடிவு எடுக்கக்கூடாது என்றும், முடிவெடுப்பதற்கு முன்பு தீவிர ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐசிசிக்க பல்வேறு நாடுகளின் வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel