நடனம் ஆட வரச்சொல்லி நாசம் பண்றாங்க இளம்பெண்களின் கதறல் ஆடியோ..
சென்னையைச் சேர்ந்த NDWM (National Domestic Workers Forum)-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிஸ்டர் வளர்மதிக்கு சில தினங்களுக்கு வந்த ஆடியோ மெசேஜ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒன்பது இளம் பெண்களை ஈவன்ட் மேனேஜ்மெண்ட் என்னும் பெயரில் ஐக்கிய அரபு நாடுகளுக்குக் கடத்திச்சென்று அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமை செய்துள்ளனர் சிலர் என்பதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி..
“மூனு மாசம் ஸ்டேஜ் ப்ரோக்ராம் நடத்த ஒரு லட்சம் தரதா சொல்லி கூட்டிட்டு வந்துட்டு இங்க ஃபுஜைரா என்னும் ஹோட்டலில் மூனு மாசமா அடைச்சு வெச்சுட்டு அவங்க வாடிக்கையாளர்களுக்கு எங்களை அனுப்பி சித்ரவதை செய்றாங்க. சரியான சாப்பாடு கிடையாது. பேசின மாதிரி சம்பளமும் தரல. நான் சாகுறதுக்கு முன்னால என் மூனு வயசு பையனை ஒரு தடவையாவது பார்த்திடணும்னு ஆசையா இருக்கு” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார் ஒரு பெண் அந்த ஆடியோ மெசேஜ்ஜில்
இதனைத் தொடர்ந்து உடனடியாக தேசிய பெண்கள் பாதுகாப்பு கவுன்சில் சேர்மன் ரேகா சர்மா மூலமாக கர்நாடகா டிஜிபியை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்படாத ஏஜெண்டாக செயல்பட்ட பசவராஜை தேடி வருகிறார்கள். பசவராஜ் அளித்திருந்த முகவரியும் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிஸ்டர் வளர்மதி இதுபற்றி கூறுகையில், “நேத்திலிருந்து ஹோட்டல் நிர்வாகம் அவங்களோட ஃவைபை கனெக்ஷனையும் கட் பண்ணிட்டாங்க. ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஹோட்டல் மீண்டும் திறக்கப்பட இருப்பதால் இவங்களை கேபரே ஆட சொல்லி நிர்பந்திக்கிறாங்களாம். வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலமாக அங்கேயுள்ள தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த அபலைப்பெண்களை மீட்பது தொடர்பாக பேசிட்டு இருக்கோம். இது போல இன்னும் எத்தனை பேர் மாட்டிக்கிட்டிருக்காங்கனு தெர்ல” என்கிறார் வருத்தத்துடன்.
இந்த பெண்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது இப்போது.
– லட்சுமி பிரியா