திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
கேரளாவில் மிக விரைவாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று இப்போது பரவ ஆரம்பித்துள்ளது. வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் திரும்பும் நபர்களால் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அம்மாநிலத்தில், இன்று மட்டும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 27 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
15 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும் 9 பேர் தமிழகத்தில் இருந்தும், 5 பேர் குஜராத்தில் இருந்தும் வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில், இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளன. சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடைபெற்றன.