சென்னை:
18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, சென்னை அருகே உள்ள நோகியா தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன தொழில்களை மீட்டெடுக்கும் வகையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தொழிற்சாலைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன.
அதுபோல சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையும் கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால், அங்கு பணிக்கு சென்றவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.
கடந்த மூன்று நாள்களில் 18 பேருக்கு கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து, ஒரகடத்தில் அமைந்துள்ள நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறு உத்தரவு வரும் வரை மூட மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Patrikai.com official YouTube Channel