புதுடெல்லி: 

ரும் மே 25-ஆம் தேதி முதல்  விமான பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு செய்யும் பணிகள்,  கண்டிப்பாக  கொரோனா பாதிப்பை கண்டறிய அரசு அறிமுகம் செய்துள்ள ஆரோக்கிய சேது ஆப்-ஐ  இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மே 25ம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்தில் பயணிக்க புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ விமானம் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் 450 விமானங்களை இயக்க உள்ளது. இந்நிலையில், இந்த விமான நிறுவனத்தில் பயணிக்க உள்ள பயணிகள் அனைவரும் கண்டிப்பாக ஆரோக்கிய சேது ஆப்-ஐ தங்கள் போன்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

கூடுதலாக, பயணிகள் அனைவரும் தங்கள் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்ய  வேண்டும். அதன் பின்னரே அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் குறிப்பிட்டுள்ளது.    விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியாவும் இதே போன்ற நடவடிக்கைகளை அறிவித்தன.

கோ ஏர் விமான நிறுவனத்தை தவிர, அனைத்து விமான நிறுவனங்களும் முன்பதிவை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அவை,

  • பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பயணம் முடியும் வரை முககவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
  • விமான நிலையத்திற்குள் வாகனத்தை விட்டு இறங்கும் போதே உங்கள் ஆவணங்கள் மற்றும் இ ஆவணங்களை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கேட்டில் பயணிகள் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படும் இடத்திற்கு வர வேண்டும்.
  • அதன்பிறகு அவர்கள் வெப்பமானியால் சோதிக்கப்படுவார்கள். அத்துடன் கேட்டில் நுழையும் போதே ஆரோக்கிய சேது ஆப்பை மொபைலில் நிறுவி இருக்க வேண்டும்.
  • ஒரு வேளை ஆரோக்கிய சேது ஆப் அவரது மொபைலில் இல்லை என்றால் கட்டாயம் அவர்கள் ஆரோக்கிய சேது ஆப் டவுன்லோடு செய்யும் இடத்திற்கு சென்று டவுன்லோடு செய்து நிறுவி உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு தான் பயணிக்க அனுமுதிக்கப்படுவார்கள்.
  • ஒரு செக்-இன் பை மற்றும் ஒரு கேபின் பை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  • முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • ஆன்லைனில் சரிபார்ப்பை உறுதிசெய்து போர்டிங் பாஸை பெற வேண்டும்.
  • பயணிகள் தாமதமாக வரக்கூடாது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அல்லது கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தவர்கள் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • பயணிகள் தாங்கள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கவில்லை, எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்று அறிவித்த பின்னரே விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் வழங்கும்.