டெல்லி:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மத்திய உள்துறை அறிவித்து உள்ளது.
உலக முழுவவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாயகம் திருப்புவதில் சிக்கல் நிலவி வந்தது. இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டன. இன்னும் ஏராளமா னோர் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி (வெளிநாடு வாழ் இந்தியர்) பிரமோத் குமார் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அடையாள அட்டை வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவசர தேவைக்கு தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகள் அவசர தேவைகளுக்காக தாயகம் திரும்ப அனுமதி அளிக்கப்படும்
உறவினர்களின் இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு இந்திய வர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுபோன்று திருமணமானவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் இந்தியா வர அனுமதி
ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் (மைனர்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தம்பதியரில் ஒருவர் இந்தியராக இருந்து, மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி அளிக்கப்படும்.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மணவர்களின் பெற்றோர் இந்தியாவில் இருந்தால், நாடு திரும்பலாம் உள்பட
பல்வேறு கட்டுபாடுகளை உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளதாக தெரிவித்து உள்ளது.