மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1425 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
பாதிக்கப்ப்டடோர் எண்ணிக்கை 41642 ஆக உயர்ந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1454 பேர் பலியான நிலையில், 11726 பேர் நோய் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel