பெங்களூரு
நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு அரசு பல விதி தளர்வுகளை அறிவித்துள்ளது.
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது நான்காம் கட்டமாக அமலில் உள்ளது.
இப்போது கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து சேவைகள் சமூக இடைவெளி விதிகளுடன் தொடங்கப்பட்ட்ள்ள்து.
பேருந்துகளில் செல்வோருக்குக் கிளம்பும் இடங்களில் சோதனை நடத்தப்பட உள்ளது.
கொரோனா அறிகுறி இல்லாதவ்ரக்ளுக்கு பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அறிகுறி இருப்பவ்ரக்ள் மருத்துவமனையில் சேர்க்கப்பட உள்ளனர்.
தனியார் வாகனங்களில் பயணம் செய்வோருக்கு எவ்வித பரிசோதனையும் கிடையாது.
இந்த தகவல்களை மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.