அமராவதி:
ந்திராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்தும் முடங்கி உள்ளது. தற்போது பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாவட்டத்துக்குள்ளேயே பேருந்துகள் இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும்,  நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பில்லாத மண்டலங்களில் முதல் கட்டமாக 1,683 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்து உள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திலும் மாவட்டங்களுக்கு இடையேயான  அரசு பேருந்துகள் எப்போது இயக்கப்படும் என தமிழக மக்கள் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.