கொச்சி:
கேரளா பெவ்கோ விற்பனை நிலையங்கள் திறக்கும் போது டோக்கன் விர்ச்சுவல் கியூ சிஸ்டம் பயன்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிந்த பின்னார் கேரளாவில் பெவரேஜஸ் கார்ப்பரேஷன் (பெவ்கோ) விற்பனை நிலையங்களைத் திறக்கும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விற்பனை நிலையங்கள் திறந்தவுடன் விர்சுவல் கியூ முறையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விர்சுவல் கியூ சிஸ்டம் பயன்பாட்டை உருவாக்கும் பணியை கொச்சியைச் சேர்ந்த ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பெவ்கோ நிர்வாக இயக்குனர் ஸ்பார்ஜன் குமார் தெரிவித்துள்ளார். விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான தேதிகளை அரசாங்கம் தீர்மானித்ததும் நாங்கள் இந்த சிஸ்டத்தை அமல் படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயன்பாடு தப்போது சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது என்று ஃபேர்கோடு தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு தெரிவித்தார். இந்த முறையை பயன்படுத்து போது, பிரச்சனைகள் இருக்கும் என்றாலும், அந்த பிரச்சினைகளை கையாள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
இந்த சிஸ்டம் மூலம் கோரிக்கைகளை விடுக்கும் பயனர்களுக்கு முதலில் வந்தவர்களுக்கு முதலில் சேவை அடிப்படையில் டோக்கன் எண் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.