மகாராஷ்டிரா:
கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததையடுத்து, லாக்டவுனை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிர மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர், பஞ்சாப், தமிழகம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து  மகாராஷ்டிரா அரசும்   லாக்டவுனை 31-ம் தேதி வரை நீட்டித்துள்ள்து.   பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே லாக்டவுனை நீட்டிக்கக் கோரியிருந்தார். 4-வது கட்ட லாக்டவுனும் தொடரும் என முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சூசகமாகத் தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால் வித்தியாசமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது இதற்கான உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் அஜெய் மேத்தா பிறப்பி்த்துள்ளார்.

அந்த உத்தரவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் லாக்டவுன் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறதாகவும்,  தளர்வுகள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் அதிகமான தளர்வுகளும் இருக்கும் என்றும்  போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, அத்தியாவசியச் சேவைக்கான வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.