டெல்லி :
வாழ்வாதாரம் இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகள் உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
அதுபோல், நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் நோக்கி செல்கின்றனர், இதில் பெரும்பாலானோர், உத்தர பிரதேஷ் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்கள்.
அப்படி செல்பவர்கள், தங்கள் சோர்வை நீக்க, சாலையில் படுத்தும், ரயில் தண்டவாளங்களில் படுத்தும் உறங்கி , பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த பரிதாபங்களும் நடந்தேறிவருகிறது.
மக்கள் படும் துயரை கண்டு பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவி செய்துவருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து உத்தரபிரதேஷ் செல்லவிருந்த வெளிமாநில தொழிலாளர்களை நேற்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார், பின் அவர்கள் சொந்த ஊர் செல்ல கார்களை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உத்தரபிரதேசில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்ற 500 பேருந்துகள் உத்தர பிரதேஷ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் :
आदरणीय मुख्यमंत्री जी, मैं आपसे निवेदन कर रही हूँ, ये राजनीति का वक्त नहीं है। हमारी बसें बॉर्डर पर खड़ी हैं। हजारों श्रमिक, प्रवासी भाई बहन बिना खाये पिये, पैदल दुनिया भर की मुसीबतों को उठाते हुए अपने घरों की ओर चल रहे हैं। हमें इनकी मदद करने दीजिए। हमारी बसों को परमीशन दीजिए। pic.twitter.com/K2ldjDaSRd
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 17, 2020
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டாமல் அரசியல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல, உடனடியாக பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.